மே 1 மற்றும் 4 தேதிகளில் மதுக்கடைகள் அடைப்பு

தேனி, ஏப். 29: தேனி மாவட்டத்தில் வருகிற மே 1 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வருகிற மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டியும், இதையடுத்து மே 4ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதையொட்டியும், இரு நாட்கள் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எனவே, மே தினத்தையொட்டி வருகிற 1ம் தேதியும், மே 4ம் தேதியும் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், தனியார் மதுபான கூடங்கள், எப்எல் 1, எப்எல் 2, எப்எல் 3, எப்எல்3 (ஏ), எப்எல் 3 (ஏஏ) மற்றும் எப்எல் 11 ஆகிய உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

இவற்றில் விதிகளை மீறி எவ்வித மதுவிற்பனையும் செய்யக்கூடாது. இந்நாட்களில் விதிகளை மீறி மது விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மதுபானக் கடை பணியாளர்கள் மற்றும் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: