தாக்குதல் வழக்கில் மூவருக்கு வலை

போடி, ஏப். 29: போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த கனகராஜ் மகன் தினேஷ்(18). பெரியகுளம் தனியார் கல்லூரி மாணவரான இவர், நேற்று முன்தினம் நடந்து சென்ற போது அதே ஊரைச்சேர்ந்த சுதாகரன் என்பவரது மகன் ரோஹித், டூவீலரில் அதிவேகமாக வந்துள்ளார். அந்த வாகனம் தினேஷ் மீது உரசுவதுபோல் ெசன்றதால், ரோஹித்தை அவர் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரோஹித், தனது தந்தை சுதாகரன், அதே ஊரைச்சேர்ந்த சசிகுமார் மகன் சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து, தினேஷ் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த தினேஷ் அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

 

Related Stories: