ஆசிய பளுதூக்குதல்: மீராபாய் ஆப்சென்ட்

காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் வரும் மே 12 முதல் 17ம் தேதி வரை, ஆசிய சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டியில், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ள இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தோள்பட்டையில் காயம் இருப்பதால் மீராபாய், பளுதூக்குதல் போட்டியில் இடம் பெற மாட்டார் என கூறப்படுகிறது. ஆசிய போட்டிகளுக்கு பின் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 53 கிலோ எடைப் பிரிவு போட்டிகளில் அவர் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

Related Stories: