லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி

லக்னோ: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி, சூப்பர் ஓவரில் 5 பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்று அசத்தியது. லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்து வீசியது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர் டிம் செபெர்ட் 2வது ஓவரில் டக் அவுட்டான நிலையில், கேப்டன் ரஹானேவும்(10 ரன்) பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த யாரும் நிலைத்து ஆடவில்லை. 20 ஓவர் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 83 ரன், கேமரூன் கிரீன் 34 ரன் எடுத்தனர். லக்னோவில் மோஷின் கான் 5 விக்கெட் வீழ்த்தினார். 2வது இன்னிங்சை துவங்கிய லக்னோ, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன், மார்க்ரம் 31 ரன் எடுத்தனர்.

கொல்கத்தா பந்துவீச்சில் அரோரா, வருண் தலா 2 விக்கெட், ராய், கிரீன், நரைன், கார்த்திக் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. முதலில் களத்துக்கு வந்த லக்னோ, சுனில் நரைன் வீசிய சூப்பர் ஓவரை எதிர்கொண்டது. பூரணை முதல் பந்திலும், மார்க்ரம் 3வது பந்திலும் நரைன் பெவிலியனுக்கு அனுப்பினார். பின்னர் 2 ரன் இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் ரிங்குசிங் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை வசப்படுத்தினார்.

Related Stories: