புனே: மராட்டிய மாநிலம் புனே ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்துகுள்ளானது. மும்பை – சோலாபூர் வந்தே பாரத் ரயில் புனே ரயில் நிலையம் வந்தபோது சக்கரம் தடம் புரண்டது. தடம் புரண்ட வந்தே பாரத் ரயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வந்தே பாரத் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து, முதல் முறையாக தடம் புரண்டு விபத்து.
