Skyroot Aerospace உருவாக்கிய “Vikram-1” ராக்கெட், விரைவில் விண்ணில் பாயும்

 

ஆந்திரா: Skyroot Aerospace உருவாக்கிய “Vikram-1” ராக்கெட், விரைவில் விண்ணில் பாயும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். Skyroot Aerospace உருவாக்கிய “Vikram-1” ராக்கெட், இறுதி ஒருங்கிணைப்பிற்காக ஸ்ரீஹரிகோட்டா அனுப்பப்பட்டது. குறைந்த பூமி வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை ஏவ உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் வரும் வாரங்களில் விண்ணில் பாய வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் விண்வெளித் துறையில், இஸ்ரோ அல்லாத தனியார் நிறுவனமாக ராக்கெட்டுகளை உருவாக்கி விண்ணில் செலுத்தும் முதல் நிறுவனம் இதுவாகும். இந்த நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ ஆகும், இது இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களான ஆகியோரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.வணிக ரீதியான செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்கான சேவைகளை குறைந்த செலவில் வழங்குவது இவர்களின் முக்கிய நோக்கமாகும்.

இது 2026 ஜூன் மாதத்தில் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ராக்கெட்டின் வன்பொருட்கள் (Hardware) தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தெலுங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி இந்த வாகனங்களை ஏப்ரல் 25, 2026 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது முழுவதும் கார்பன்-கம்போசிட் (Carbon-composite) கொண்டு தயாரிக்கப்பட்டது. இதன் உயரம் சுமார் 20 மீட்டர் (75 அடி) ஆகும். சிறிய வகை செயற்கைக்கோள்களை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 300 – 480 கிலோ வரை எடையைத் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

இதில் 3D பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட ‘ராமன்-2’ (Raman-2) திரவ எஞ்சின் மற்றும் ‘கலாம்’ (Kalam) தொடர் திட எரிபொருள் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2022-ல் ஸ்கைரூட் நிறுவனம் ‘விக்ரம்-எஸ்’ (Vikram-S) என்ற தனது முதல் துணை-சுற்றுப்பாதை (Sub-orbital) ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து இப்போது சுற்றுப்பாதை ஏவுதலுக்கு விக்ரம்-1 தயாராகி வருகிறது.

Related Stories: