சென்னை: திருவள்ளூரில்ஸ்ரீவைத்திய வீரராகவர் கோயில் சித்திரை பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் 28ம் தேதி தேரோட்டமும், 30ம் தேதி தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது. திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா நேற்று தொடங்கியது. இவ்விழா, மே மாதம் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி நேற்று காலை 4.15 மணியளவில் த்வஜாரோஹனம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5.30 மணியளவில் தங்க சப்பரம் புறப்பாடும், 11 மணிக்கு திருமஞ்சனமும் நடந்தது. இரவு 7 மணி அளவில் சிம்ம வாகனத்தில் வீரராகவர் தேவி, பூதேவியுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது.
இன்று (23ம் தேதி) காலை 5 மணியளவில் ஹம்ச வாகனத்தில் வீதி புறப்பாடும், 9:30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சூரிய பிரபை புறப்பாடும், நாளை (24ம் தேதி) காலை 4 மணியளவில் கருட சேவை (கோபுர தரிசனம்), 6 மணியளவில் வீதி புறப்பாடும், மாலை 3 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7.30 மணியளவில் அனுமந்த வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெறுகிறது. அதேபோல், 25ம் தேதி (சனிக்கிழமை) காலை 5 மணியளவில் சேஷ வாகனத்தில் புறப்பாடும், 10 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சந்திர பிரபையும், 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணியளவில் நாச்சியார் திருக்கோலமும், 10.30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் யாளி வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெறுகிறது.
மேலும், 27ம் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணியளவில் வேணுகோபாலன் திருக்கோலம் சூர்ணாபிஷேகமும், 6 மணியளவில் வெள்ளி சப்பரமும், 10.30 மணியளவில் திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு யானை வாகனமும், 28ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 5.15 மணியளவில் தேருக்கு எழுந்தருளுதலும், 7:30 மணியளவில் தேர் புறப்பாடும், இரவு 6.30 மணியளவில் தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்சனமும், இரவு 9:30 மணியளவில் கோவிலுக்கு எழுந்தருளும் நடைபெறுகிறது.
29ம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் திருமஞ்சனமும், மாலை 3 மணியளவில் திருப்பாதம் சாடி திருமஞ்சனமும், இரவு ஏழு 7.30 மணியளவில் குதிரை வாகனமும், 30ம் தேதி (வியாழக்கிழமை) காலை 4 மணியளவில் ஆள் மேல் பல்லக்கும், 10.30 மணியளவில் தீர்த்தவாரியும், இரவு 7.30 மணியளவில் விஜயகோடி விமானமும் நடைபெறுகிறது. வரும் மே மாதம் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமஞ்சனமும், 10.30 மணியளவில் துவாதச ஆராதனையும், இரவு 9 மணியளவில் கண்ணாடி பல்லக்கும், 11.30 மணியளவில் த்வஜ அவரோகணமும் நடைபெறுகிறது. இந்த பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட்ஸ்ரீரங்கநாதன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.
