பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்கு பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

பெரம்பலூர், ஏப். 23: தேர்தலை முன்னிட்டு நேற்று வாக்குச்சாவடி மையங்களை பெரம்பலூர் எஸ்பி பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் நேற்று மாலை வாக்குப்பதிவு நடைபெறக்கூடிய வாக்குச் சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, வாக்குச் சாவடி மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்களிக்க வரும் பொது மக்களுக்கான வசதிகள், காவல்துறையினரின் பணிப் பகிர்வு உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்தார்.

மேலும்,. ஆய்வின் போது, சோதனை சாவடிகளில் பணிபுரியும் காவல்துறையினர், தேர்தல் நேரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புடன் இருக்கவும் காவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் பணியில் பொதுமக்களிடம் மரியாதை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார். தேர்தல் நடைபெறும் நாளில் அமைதியான மற்றும் சீரான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: