சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். அதில்; சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள். கலைஞரை விட அதிக ஆபத்தானவன் நான் என்று கூறுவது எனக்கு பெருமை; தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்தான். நமது உரிமை, கலாச்சாரம், மொழியை அழிக்க நினைக்கும் பாஜக, அவர்களின் அடிமைகள் தமிழ்நாட்டுக்கு வேண்டாம். திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூ.7,000 கோடிக்கும் அதிகமான திருக்கோயில் சொத்துகளை மீட்டுள்ளோம். திமுக ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் துணை நிற்பதும் திமுகதான். நம்ம ஆட்சியில் குறைகளாக சொல்லப்பட்ட சில விசயங்களில் கூட, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது ரொம்பவே Better-ஆ நாம இருக்கோம்.

இருந்தாலும் அந்தக் குறைகளையும் சரிசெய்ய எல்லா வழிமுறைகளையும் நாம செஞ்சுட்டோம். அதனுடைய விளைவுகளை இன்னும் கொஞ்ச நாளில் நாம் பார்ப்போம். நாம் கொளுத்திய நெருப்புதான் கொழுந்து விட்டு எரிந்து தொகுதி மறுவரையறை மசோதாவை சாம்பலாக்கியது. தேர்தல் நடக்கும் நேரத்தில் இவ்வளவு ஆணவத்துடன் நம்மை வஞ்சிக்க நினைக்கிறார்கள் என்றால், இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றிப்பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னென்ன கொடுமைகள் எல்லாம் இங்கு அரங்கேறும் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.

தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜக வெல்ல முடியாது என்பதை வரலாறு சொல்லும். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் எதிர்காலமும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.

Related Stories: