வீரமலைபாளையத்தில் ஆட்கள், கால்நடைகள் பிரவேசிக்க தடை

திருச்சி, ஏப்.18: துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளதால் வீரமலைபாளையத்தில் வரும் 25 முதல் மே 2 வரை ஆட்கள் கால்நடைகள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் அருகே உள்ள வீரமலைபாளையத்தில் துப்பாக்கி சுடும் இடத்தில் மெட்ராஸ் பொறியியல் குழு மற்றும் மத்திய அழகு பயிற்சியாளர்கள் சார்பில் வரும் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை காலை 7.30 முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை துப்பாக்கி சூடும் பயிற்சி நடைபெற உள்ளது.

இதனால் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகளை மனித நடமாட்டத்தை அப்பகுதியில் தவிர்க்க வேண்டும். மேலும் இவ்விடத்தில் யாரும் பிரவேசிக்க கூடாது. இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: