சென்னை: சென்னை மாவட்டத்துக்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன ? என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் 6 திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்:
மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள்
- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.
- மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு RO சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மற்றும் மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.
- அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
- கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகந்தரப் பண்பாட்டு மையம் அமைக்கபடும்.
சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து
- பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுடன் ஒவ்வொரு தெருவையும் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.
- போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தை 25% வரை சேமிக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் போக்குவரத்து மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படும்.
திட்டமிட்ட கால அளவில் உட்கட்டமைப்புத் திட்டங்கள்
- எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.
- மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்.
- மழைநீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.
- பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.
- அழகான சாலைகள், அகலமான நடைபாதைகள், நிழல் தரும் மரங்கள், அனைவரும் பயன்படுத்தக்கூடிய கழிப்பறை வசதிகள் என உலகத் தரத்தில் எழில்மிகு சாலை வசதிகள் 2029க்குள் அமைக்கப்படும்.
மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சனைக்குத் தீர்வு
- விலங்குகள் பிறப்புக்கட்டுப்பாட்டு (ABC) திட்டத்தின் கீழ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் நாய் பிடிப்பவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கப்படும்.
- தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விரிவுபடுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.
உலகளாவிய சிறப்பு மையம்
- AL, Animation, Visual Effects, Gaming, and Immersive Technologiesக்கான சிறப்பு மையம்
- ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு
- 20,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள்
உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway)
- உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு
- உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
- ஆராய்ச்சி மையம்
- அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள்
