9ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல், ஏப்.19: நாமக்கல் கொல்லம்பட்டறை தெருவை சேர்ந்தவர் பூபதி, லாரி டிரைவர். இவரது மனைவி மாதேஸ்வரி, நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்களது மகள் பிருத்திகா (14). நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில ஆண்டாக கணவன் – மனைவி இருவரும், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பூபதி அவ்வப்போது குழந்தைகளை பார்த்து வந்து உள்ளார். நேற்று முன்தினம், ஓட்டலுக்கு சென்று விட்டு இரவு 10.30 மணியளவில் மாதேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஜன்னல் வழியாக பார்த்தபோது, சமையல் அறையில் பிருத்திகா தூக்கில் சடலமாக தொங்குவது தெரியவந்தது. இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: