அத்தனூர் அம்மன் கோயில் தேர்த்திருவிழா

நாமகிரிப்பேட்டை, ஏப்.19: வெண்ணந்தூர் அடுத்த அத்தனூரில், அத்தாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் குதிரை, சிம்மம், காமதேனு, பூதம், பல்லாக்கு, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் துவங்கிய தேரோட்டம் மாலை மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அத்தாயி அம்மனுக்கு கிடா பலியிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Related Stories: