ராசிபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

ராசிபுரம், ஏப்.19: ராசிபுரத்தில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடந்தது. தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியில் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். 21ம் ேததி மாலையுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தியும், எவ்வித அச்சமின்றி பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்ய வேண்டி, பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகிறது. ராசிபுரம் காவல்துறை மற்றும் துணை ராணுவ வீரர்கள் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி ராசிபுரம், வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி புதிய பேருந்து நிலையம், ஆத்தூர் சாலை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் என நகரின் முக்கிய வழியாக சென்றது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: