ரூ.2.37 லட்சத்திற்கு கொப்பரை விற்பனை

திருச்செங்கோடு, ஏப். 18: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஆனங்கூர், சிறுமொளசி, பன்னிகுத்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 42 மூட்டை கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடந்தது. ஏலத்தில் முதல் தரம் கொப்பரை கிலோ ரூ.143 முதல் ரூ.155 வரையிலும், இரண்டாம் தரம் கொப்பரை கிலோ ரூ.125 முதல் ரூ.132 வரையிலும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 42 மூட்டை கொப்பரை ரூ.2.37 லட்சத்துக்கு ஏலம் போனது. அதே போல், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட 74 மூட்டை கொப்பரையை கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் கொப்பரை கிலோ ரூ.138.80 முதல் ரூ.157.90 வரையிலும், இரண்டாம் தரம் கொப்பரை கிலோ ரூ.125.90 முதல் ரூ.140.90 வரையிலுமாக மொத்தம் ரூ.4.85 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் நடந்தது.

Related Stories: