தேர்தல் பணிபுரியும் அரசு அலுவலர், காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு வரும் 22ம் தேதி வரை நடக்கிறது அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில்

வேலூர், ஏப்.18: வாக்குப்பதிவு தினத்தன்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் 12 துறைகளை சார்ந்த அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று துவங்கி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையமானது தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தங்களுடைய வாக்குரிமையை செலுத்துவதற்காக தபால் மூலம் வாக்குரிமையை செலுத்தும் வசதியை வழங்கியுள்ளது. அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தென்னக ரயில்வே, விமான போக்குவரத்துத்துறை, மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, சென்னை மெட்ரோ ரெயில், தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம், மின்வாரியம், தீயணைப்புத்துறை, சிறைத்துறை என 12 துறைகளை சார்ந்த விருப்பமுள்ள பணியாளர்கள் தபால் வாக்குகளை செலுத்துவதற்காக படிவம் 12டியும், வாக்குப்பதிவு தினத்தன்று பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை செலுத்த படிவம் 12ம் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வழங்கியுள்ளனர்.

இவர்கள் நேற்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை தமிழகம் முழுவதும் தங்களது தபால் வாக்குகளை தங்களது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும், பிறமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் தபால் வாக்கு ெசலுத்த ஒதுக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும் செலுத்துகின்றனர். வேலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள 12 துறைகளை சார்ந்த 171 பேர், வாக்குப்பதிவு தினத்தன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வேலூர் மாவட்டத்தை சார்ந்த 1473 காவலர்கள், 146 நுண் பார்வையாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் தங்களது தபால் வாக்குகளை தங்களது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும், பிற மாவட்டங்களை சேர்ந்த 395 காவலர்கள், தங்களது தபால் வாக்குகளை வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும், சேவூர் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு 15வது அணியின் 615 காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களில் செலுத்துகின்றனர்.

இப்பணி நேற்று 17ம் தேதி காலை 10 மணி முதல் துவங்கி வரும் 22ம் தேதி வரை மாலை 5.45 மணி வரை நடக்கிறது. இவ்வாறு தங்கள் தபால் வாக்குகளை செலுத்த உள்ள அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், காவலர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் தபால் வாக்குகளை ெசலுத்தும்பொழுது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 12 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டுமென ஏற்கனவே ேகட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வேலூர் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு செலுத்துவதற்கான வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ள வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் நடந்தது. இதனை தேர்தல் பொது பார்வையாளர் யுகல் கிஷோர்பண்ட் பார்வையிட்டார்.

Related Stories: