அனுமதியின்றி வைத்த தவெக பேனர் அகற்றம்

குடியாத்தம், ஏப்.16: குடியாத்தம் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தவெக பேனரை அதிகாரிகள் அகற்றினர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. பொது இடங்களில் அரசியல் கட்சி பேனர்கள், வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியாத்தம் அடுத்த பாலிடெக்னிக் கூட்ரோடு பகுதியில் அனுமதி இல்லாமல் தவெக பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வேலூர் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் சென்றது. அதன் அடிப்படையில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி துணை தோட்டக்கலை உதவி அலுவலர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று பேனரை அகற்றி அப்புறப்படுத்தினர். அப்போது அங்கிருந்த தவெக நிர்வாகிகள் பேனர் வைக்க முறையாக ரசீது பெற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் பேனர் வைப்பதற்கான ஆணை இல்லாததால் அகற்றப்பட்டது.

Related Stories: