உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.3.65 லட்சம் பறிமுதல் கே.வி.குப்பம் தொகுதியில்

கே.வி.குப்பம்,ஏப்.17: கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொண்டசமுத்திரம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் வந்தவரிடம் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் உரிய ஆவணங்களிலிருந்து கொண்டு வந்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் பெங்களூர் ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த மோனிஷா (28) எனவும், பெங்களூரில் ஒரு சிறிய நிறுவனம் நடத்தி வருகிறார். வியாபார ரீதியாக வேலூருக்கு செல்வதாக அதற்கான பணத்தைக் கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதற்குரிய ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவர் கொண்டு வந்திருந்த ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த பணம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: