சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பேயர்ன், ஆர்சனல் அரையிறுதிக்கு தகுதி

மூனிச்: யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, பேயர்ன் அணி, 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் மூனிச் உள்ளிட்ட நகரங்களில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிச் சுற்றின் 2ம் நிலை போட்டியில் பேயர்ன் மூனிச் – ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சளைக்காமல் சிறப்பாக ஆடி மாறி மாறி கோல் போட்டனர். கடைசியில் 4-3 என்ற கோல் கணக்கில் பேயர்ன் அணி வெற்றி பெற்றது.

காலிறுதிப் போட்டியின் இரு நிலைகளில் கிடைத்த புள்ளிகள் அடிப்படையில், பேயர்ன் அணி, 6-4 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆர்சனல் – ஸ்போர்டிங் அணிகள் இடையே நேற்று நடந்த காலிறுதிச் சுற்றின் 2ம் நிலை போட்டி கோல்களின்றி டிராவில் முடிந்தது. இருப்பினும், காலிறுதியின் இரு நிலைகளில் கிடைத்த புள்ளிகளின் படி, 1-0 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடிய ஆர்சனல் அரையிறுதிக்கு முன்னேறியது. காலிறுதிச் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அரையிறுதியின் முதல் நிலைப் போட்டிகள் வரும் 29ம் தேதி நடைபெற உள்ளன. ஒரு போட்டியில், ஆர்சனல் – அத்லெடிகோ மாட்ரிட் அணிகளும், மற்றொரு போட்டியில் பேயர்ன் – பிஎஸ்ஜி அணிகளும் மோதவுள்ளன. அரையிறுதியின் 2ம் நிலை போட்டிகள் வரும் மே 6ம் தேதி நடைபெற உள்ளன.

Related Stories: