ஆம் ஆத்மி எம்பி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

புதுடெல்லி: ஆம் ஆத்மி எம்பி அசோக் குமார் மிட்டலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பியான அசோக் குமார் மிட்டல் சமீபத்தில் கட்சியின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள லவ்லி புரெபாஷனல் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார்.

இந்நிலையில் அசோக்குமார் மிட்டலுக்கு சொந்தமான வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மிட்டலுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜலந்தர் மற்றும் குருகிராமில் உள்ள சுமார் 10இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

* பஞ்சாப் தேர்தல் ஏற்பாடுகள் தயார்
எம்பி அசோக் மிட்டல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக ஆத் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பஞ்சாபில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மோடி தொடங்கிவிட்டார். ஆனால் பஞ்சாப் மக்கள் இதனை சகித்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் பாஜவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: