புதிய பயணத்தை தொடங்கிய சாக்‌ஷி அகர்வால்

தமிழில் ‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’, ‘நான் கடவுள் இல்லை’, ‘பஹீரா’, ‘ஃபயர்’ உள்பட பல படங்களில் நடித்து, பல டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சாக்‌ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோராக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 5 வருடங்களாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், இறுதி 11 மாதங்களில் 551 முறை தயாரிப்பு கலவையில் நிறைய மாற்றங்களை செய்து, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப தயாரிப்பை உருவாக்கியுள்ளார். பிரபலங்கள் ஏற்கனவே இருக்கும் தயாரிப்புகளுக்கு விளம்பர தூதர்களாக செயல்பட்டு வரும் நிலையில், சாக்‌ஷி அகர்வால் தனது பெயரை ஒரு தயாரிப்புடன் இணைப்பதை விட, தரமான ஊட்டச்சத்து தயாரிப்பை உருவாக்க முடிவு செய்துள்ளார்.

‘ஓகேயுயு’ என்பது தாவர அடிப்படையிலான பிரீமியம் புரோட்டீன் பார். இதில் 35 கிராம் புரோட்டீன், 14 கிராம் நார்ச்சத்து, 6 கிராம் கொலாஜன் இடம்பெற்றுள்ளது. சர்க்கரை, தேவையற்ற ரசாயனங்கள் மற்றும் செயற்கை சேர்மங்கள் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து சாக்‌ஷி அகர்வால் கூறுகையில், ‘கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடித்தபடி, ‘ஓகேயுயு’ நிறுவனத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன். இந்திய மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது உருவானது. எனது பல வருட கனவை அனைவருடனும் பகிர்ந்துகொள்வதில் அதிக மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றார்.

Related Stories: