பாஜக கோட்டையை உடைத்து எப்படி வெற்றி பெற்றார் பிரசாந்த் கிஷோர்!!!

பிகாரில் பாஜக-வின் கோட்டையான பங்கிப்பூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு பல வலுவான காரணங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

முதலாவதாக, பாஜக-வின் நீரஜ் குமார் சின்ஹாவைவிட பிரசாந்த் கிஷோர் வலுவான வேட்பாளராக இருந்தது முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. பாஜக-வின் கோட்டையான பங்கிப்பூர் தொகுதியில் மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கலாம். அந்தத் தொகுதி வாக்காளர்கள், பிற வேட்பாளர்களைவிட பிரசாந்த் கிஷோரே சிறந்த வேட்பாளர் என்று எண்ணியுள்ளனர்.

அதேபோல், பாஜக மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் ஆதரவு தளங்களில் இருந்தும் அவரை நோக்கி வாக்குகள் திரும்பியுள்ளன. பாஜக-வின் ஆதரவு தளமான முன்னேறிய வகுப்பினரில் காயஸ்தர் சமூகத்தினர் மட்டுமே பாஜகாவுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். பிற முன்னேறிய வகுப்பினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாக்காளர்களில் ஒரு பிரிவினரும் பிரசாந்த் கிஷோரை ஆதரித்துள்ளனர்.

ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் ஆதரவு தளமான முஸ்லிம் மற்றும் யாதவ சமூக வாக்காளர்களில் கணிசமான பகுதியினரும் அவருக்கு வாக்களித்துள்ளனர். தனது தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர், வழக்கமான சாதி, மத அரசியலைத் தாண்டி கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தினார். மேலும், உள்ளூர் அளவிலான பிரசாரக் கூட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததோடு, பாஜக-வில் நிலவிய உள்ளூர் உட்கட்சிப் பூசல்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது அவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

Related Stories: