பீகார்: பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகித்து வருகிறார். பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் காலியாக இருந்த பங்கிப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
