முப்படைகளின் எதிர்கால போர்முறை பயிற்சி இன்று தொடக்கம்

புதுடெல்லி: முப்படைகளின் எதிர்காலப் போர்முறைப் பயிற்சியின் நான்காவது பதிப்பு, டெல்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் இன்று தொடங்குகிறது. நான்கு வாரங்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஆதரவின் கீழ் நடத்தப்பட்டு, கூட்டுப் போர்முறை ஆய்வு மையத்தால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்தப் பாடநெறியானது முப்படைகளின் அதிகாரிகளையும், அரசு அமைப்புகள், கல்வித்துறை, தொழில்துறை மற்றும் மூலோபாய சிந்தனைக் குழுக்களின் பிரதிநிதிகளையும் ஒன்றிணைக்கிறது. இந்த பயிற்சி புவிசார் அரசியல் முன்னேற்றங்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், இணையவழி மற்றும் அறிவாற்றல் போர், தகவல் போர்,உள்ளிட்ட பரந்த அளவிலான பாடங்களை உள்ளடக்கியுள்ளது. இதில், மூத்த ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள்லந்துகொள்வார்கள்.

Related Stories: