மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி 4 வழிச் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார்கள் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் மதுரை சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஸ்ரீராம், அவரது மனைவி ரஞ்சனா (25), ஒன்றரை வயது குழந்தை பிரனிதா உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளார்.
