சென்னை: காவிரி விவகாரத்தில் தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் எந்த ஆட்சி நடந்தாலும் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும். தவெக அரசு செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடு வேதனையளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
