×

முதலமைச்சர் விஜயை விமர்சித்த வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்

சென்னை: திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜீ.வி.மார்க்கண்டேயன் முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதையடுத்து, தன்னை சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Kaitana Dimuka M. L. A. Eicourt ,Markandeyan ,Chennai ,Dimuka M. L. A. ,iCourt ,Kovilpatty, Vlathikulam ,Dimuka M. L. A. Zee ,V. ,Thoothukudi District Crime Police ,Markandayan ,
× RELATED கிரீஸ் நாட்டில் நடுவானில் மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்.! 2 பேர் பலி