சில்லிபாயின்ட்..

* உள்ளூர் போட்டியில் அபிஷேக் அமர்க்களம்
பஞ்சாப் மாவட்டங்களுக்கு இடையேயான சீனியர் கிரிக்கெட் போட்டியில், அமிர்தசரஸ் அணிக்காக களமிறங்கிய அபிஷேக் ஷர்மா டர்ன் டரன் அணிக்கு எதிராக 91 பந்தில் 25 சிக்சர், 13 பவுண்டரியுடன் 233 ரன் விளாசி அசத்தினார். அமிர்தசரஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 533 ரன் குவித்தது. சமீபத்திய சர்வதேச போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வந்த அபிஷேக் உள்ளூர் போட்டியில் வெளுத்து வாங்கிய அதிரடி ஆட்டம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

* ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள வங்கதேச அணியில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் (31 வயது) சேர்க்கப்பட்டுள்ளார்.

* வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் அணிகளிடையே போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டி, கனமழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்ததால் தாமதமானது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

Related Stories: