ஆண்கள் ட்ரிபிள் ஜம்பில்: தமிழகத்தின் சித்ரவேல், திருமாறன் அமர்க்களம்

 

காமன்வெல்த் தடகளம் ஆண்கள் மும்முறை தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். ஸ்காட்ஸ்டோன் அரங்கில் நேற்று நடந்த விறுவிறுப்பான பைனலில் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார்.

மற்றொரு இந்திய வீரர் செல்வ பிரபு திருமாறன் (16.52 மீ.) 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
ஜமைக்காவின் ஜோர்டன் ஸ்காட் 16.72 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சித்ரவேல், திருமாறன் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ள சித்ரவேல், திருமாறனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Related Stories: