மதுபானி: நேபாளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பல மாவட்டங்களில் பதற்றம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள இந்திய நேபாள எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
