புதுடெல்லி: தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் உட்பட பல்வேறு வகையான நிதிகளை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய நிதி அமைச்சகத்தின் தரப்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘தமிழ்நாடு உட்பட 28 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி பகிர்வாக ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ரூ.4,466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.19,208 கோடியும், பீகாருக்கு ரூ.10,845 கோடியும் மற்றும் மத்தியப்பிரதேசத்திற்கு ரூ.7,022 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
