சத்ரபதி சம்பாஜிநகர்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் (சிஜேபி) தலைவர் அபிஜித் தீப்கே, நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து கடந்த மாதம் டெல்லி, ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் வசித்து வரும் தீப்கே, நேற்று காலை 11.45 மணியளவில் தனது இல்லத்தின் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மக்களை சந்திக்க வந்தார்.
அப்போது திடீரென தீப்கே, வாந்தி எடுத்தார். உடல்நிலை சரியில்லாததால் அவர் மக்களை சந்திக்காமலேயே வீட்டிற்குள் சென்றுவிட்டார். டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
