×

வேறு எந்த கட்சியிலும் சேரப்போவதில்லை: தோப்பு வெங்கடாசலம் உறுதி

 

ஈரோடு: திமுக மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், வேறு எந்த கட்சியிலும் சேரப்போவது இல்லை என தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார்.  அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், 2026 சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின்னர் அவர், கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட தோப்பு வெங்கடாசலம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:எனக்கு, கட்சி தலைமை உரிய மரியாதை கொடுத்தார்கள். உட்கட்சி பிரச்னையால் திமுக ஆட்சி இழந்து இருக்கிறது. என்னை பொறுப்பில் இருந்து நீக்கியது, எனக்கு நல்லதா? அல்லது கட்சிக்கு நல்லதா? என்பதை காலம் முடிவு செய்யும்.இப்போதைக்கு மாற்றுக்கட்சிக்கு போகும் எண்ணம் இல்லை. என்னிடத்தில் விளக்கம் கேட்கவில்லை. பணமோ அல்லது வேறு எதையும் எதிர்பார்த்து இந்த கட்சியில் நான் சேரவில்லை. நல்ல மனிதர் மு.க.ஸ்டாலினுக்காக சேர்ந்தேன்.

எந்த இயக்கத்தில் இருந்தாலும் நன்றி கடனோடு விருப்பு, வெறுப்பின்றி பணியாற்றினேன். சட்டமன்ற தேர்தலில் எனக்கு பெருந்துறை தொகுதியில் போட்டியிட அனுமதி அளித்தார்கள். பவானி, பெருந்துறையில் எனது ரத்தம், வியர்வையை சிந்தி, எனது பணியை சிறப்பாக செய்தேன். தேர்தல் தோல்விக்கு ஆய்வுக்குழு வந்தது. அவர்கள் தலைமைக்கு என்ன அறிக்கை கொடுத்தார்கள் என தெரியவில்லை.இவ்வாறு தோப்பு வெங்கடாசலம் கூறினார்.

Tags : Thoppu Venkatachalam ,Erode ,DMK ,AIADMK ,2026 assembly elections ,
× RELATED மின்கட்டண கணக்கீட்டில் வேறுபாடுகள்...