- STBI
- சத்யராஜ்
- சென்னை
- தமிழ் சுடார் விருதுகள்
- புரசைவாக்கம்
- துணை ஜனாதிபதி
- ஆசா. உமர் ஃபாரூக்
- தேசிய நிர்வாகக் குழு
- ரவிச்சந்திரன்
- பொது
- நிஜாம் முஹைதீன்
- அகமது நவாவி
சென்னை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் இந்தாண்டுக்கான சிறந்த ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா புரசைவாக்கத்தில் நேற்று நடந்தது. துணை தலைவர் அச.உமர் பாரூக் தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபுபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில செயலாளர்கள் ஏ.எஸ்.ஷபீக் அஹம்மது, பாஸ்டர் மார்க், நஜ்மா பேகம், வழ,ஹஸ்ஸான், பொருளாளர் முஸ்தபா, வர்த்தகர் அணி மாநில தலைவர் அமீர் ஹம்ஸா, செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம், பஷீர் சுல்தான், முகமது ரஷீத், அஸ்கர் அலி, மகளிரணி மாநில தலைவர் பாத்திமா கனி, வழக்கறிஞர் அணி செயலாளர் ராஜா முகமது, எஸ்டிடியூ மாநில தலைவர் ஹசன் பாபு, யங் டெமாக்ரட்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் சித்தீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் ஆளுமைகளுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் காயிதே மில்லத் விருது- ஜமாத்தே இஸ்லாமி முன்னாள் மாநில தலைவர் அப்துர் ரகீப், மவுலானா அபுல் கலாம் ஆசாத் விருது-சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வேந்தர் மரியஸீனா ஜான்சன், டாக்டர் அம்பேத்கர் விருது-மொழி அரசியல் ஆய்வாளர் சபுர் அலி, தந்தை பெரியார் விருது- நடிகர் சத்யராஜ், பேரறிஞர் அண்ணா விருது-மொழி உரிமைச் செயற்பாட்டாளர் ஆழி செந்தில்நாதன், எஸ்டிபிஐ முன்னாள் தேசிய தலைவர் அறிவுக்கடல் சயீத் சாஹிப் விருது- எஸ்டிபிஐ தேசிய செயலாளர் யாமுகைதீன், வணிகமேதை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் விருது-பிளாக் துலிப் குழுமத் தலைவர் முகமது யஹ்யா, புரட்சியாளர் பழனிபாபா விருது- இந்திய தவ்ஹீத் ஜமாத் நிறுவனத் தலைவர் மறைந்த எஸ்.எம்.பாக்கர். கவி கா.மு.ஷெரீப் விருது-பன்னூலாசிரியர் சேயன் இப்ராகிம், அன்னை தெரேசா விருது- சமூகச் செயற்பாட்டாளர் ஜாஸ்மின் அபுபக்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக யுனைடெட் எகனாமிக் ஃபோரத்தின் தலைவர் ஏ.ஆர்.அகமது புஹாரி கலந்துகொண்டார். மாவட்ட தலைவர்கள் இஸ்மாயில், அஹமது, பூட்டோ மைதீன், கோல்டு ரபிக், சீனி முகமது, அப்துல் ரசாக், முகமது பிலால், சாதிக், முகம்மது சலீம், மாலிக், ஜூபைர் அலி, ஜாபர் ஷெரீப் உள்பட பலர் பங்கேற்றனர்.
