×

சிவகாசியில் அதிரடி; ரூ.1 கோடி பட்டாசுகள் ஒரே நாளில் பறிமுதல்; கட்டிடங்களுக்கு சீல்

 

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சில தினங்களுக்கு முன்பு தகர ஷெட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார், வருவாய்த்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்தவகையில், சிவகாசி பிகேஎஸ் ரோடு பகுதியில் கனிராஜ் என்பவர் நடத்தி வரும் பட்டாசு கடையில் நேற்று போலீசார் சோதனை நடத்தி, அருகிலுள்ள கட்டிடங்களில் வைத்திருந்த 3,000 அட்டை பெட்டிகளில் பதுக்கியிருந்த ரூ.80 லட்சம் மதிப்பு பட்டாசுகளை பறிமுதல் செய்து உரிமையாளர் கனிராஜை கைது செய்தனர். இதேபோல் நேற்று ஒரேநாளில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.1 கோடிக்கு மேல் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த கட்டிடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags : Sivakasi ,Chengamalapatti ,Sivakasi, Virudhunagar district ,
× RELATED மின்கட்டண கணக்கீட்டில் வேறுபாடுகள்...