மும்பை: அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்ய ரஹானே அறிவித்துள்ளார். மஹாராஷ்டிராவை சேர்ந்த ரஹானே(38) தான் ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். “அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார். 2011ல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமானார் ரஹானே. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் அஜிங்க்ய ரஹானே. 85 டெஸ்ட் மற்றும் 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய அணிக்காக 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 5077 ரன்கள் சேர்த்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்தியாவுக்காக 90 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 சதங்களுடன் 2,962 ரன்கள் சேர்த்துள்ளார் ரஹானே. வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவின் நம்பகமான டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரஹானே. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 6 அணிகளுக்காக மொத்தம் 212 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
