சபரிமலைக்கு விநியோகம் செய்த நெய்யில் முறைகேடு: பால்வள மேம்பாட்டு துறை

கேரளா: சபரிமலைக்கு மில்மா நிறுவனம் விநியோகம் செய்த நெய்யில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பால்வள மேம்பாட்டு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்திற்கு 1.5 லட்சம் லிட்டருக்கு 5 அதிகமான தரம் குறைந்த நெய் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தனம் திட்டாவில் இருந்து பம்பைக்கு நெய் கொண்டு செல்லும் வழியில் தரம் குறைந்த தமிழ்நாட்டு நெய் கலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தரம் குறைந்த நெய் விநியோகம் செய்ததன் மூலம் மில்மா நிறுவனத்திற்கு ரூ.85 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

Related Stories: