புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் தனியார் சுயநிதி மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் இடையேயான இடப்பங்கீடு குறித்து இன்று 2ம் கட்டமாக ஆலோசனை நடைபெற்றது. 2026-27ம் கல்வியாண்டில் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 429 ஆக அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
