திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா துவக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரம் பெரும்பாக்கம் கிராமம், நேதாஜி சாலையில் உள்ள அருள்மிகு  பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோயிலில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தீமிதி விழா விழா உற்சவமும் நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு வரும் 31ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாக அம்மனுக்கு துவஜாரோஹணம் கொடியேற்றுதலும் அரக்கு மாளிகை எரிதலும் இடும்பி ஞானகுரியும் நடக்கிறது. 10 நாட்களுக்கு தினசரி அம்மன் வீதி உலா உற்சவங்களும் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி பக்கா சூரன் வதமும் பார்த்தன் வில்வலைப்பும் பக்கா சூரனுக்கு அன்னம் அளித்தலும் நடக்கிறது.

2ம்தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணமும் இராஜ சூழ வேல்வியும் 3ம் தேதி பகடைத் துயிலும், பரந்தாமன் அருளும் 4ம் தேதி அர்ஜுனன் தபசும் 5ம் தேதி வனத்தில் பாண்டவர் வாழ்ந்த கதைகளும் 6 ம் தேதி மச்ச நாட்டின் பெருமையும், மாடுபிடி சண்டையும், 7 ம் தேதி கண்ணன் தூதும், துரியன் வாதும், 8 ம் தேதி பெற்றவர் பாசமும், பிள்ளையின் நேசமும், இரவு கர்ணன் கண்ட கருட வாகன காட்சியும், 9ம் தேதி காலை துரியோதனன் படுகளமும் மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு, காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். வரும் 10ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் டிஎன்ஆர்.சீனிவாசன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாஸ்கரன் மோகனசுந்தரி, செயல் அலுவலர் திலகர் மற்றும் விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு தினசரி பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்.கே.கேட்டை சொற்பொழிவு செல்வர் பூபால லோகநாதன் மகாபாரத சொற்பொழிவும், இராணிப்பேட்டை மாவட்டம் செய்யசாரு நாகராஜன் கவிவாசித்தலும் நடைபெறுகிறது.

Related Stories: