பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 29: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மூக்காரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிழங்கு மில் வாத்தியார் பெருமாள் கவுண்டர். இவர் 100 வயதை கடந்த நிலையில், ஓய்வூதியம் பெற்று வருகிறார். இதையடுத்து, அவரை பாராட்டி, இருமடங்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை வேலூர் மண்டல கருவூல இணை இயக்குனர் உஷா, தர்மபுரி கருவூல அலுவலர் மோகனசுந்தரம், பாப்பிரெட்டிப்பட்டி கருவூல உதவி அலுவலர் உமா மகேஸ்வரி, ஜெய்கணேஷ், பெரியண்ணன், துரை மற்றும் கருவூல பணியாளர்கள் நேரில் வழங்கி பாராட்டினர். அப்போது, பெருமாள் கவுண்டரின் மகன்கள் பழனிசாமி மற்றும் சக்திவேல் ஆகியோர் உடனிருந்து, அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
