திறக்கப்படாத ரேஷன் கடை கட்டிடம்

 

சாயல்குடி, ஜூலை 29: கடலாடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை 4 மாதங்களாக திறக்காததால், வாடகை கட்டிடத்தில் இயக்கி அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.கடலாடி பஞ்சாயத்தில் 2ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள சொர்ண காளியம்மன்கோயில் மடத்தில் ரேஷன் கடை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் கடலாடி மற்றும் அருகே உள்ள கிடாக்குளம் உள்ளிட்ட கிராமமக்கள் அரசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த ரேஷன் கடை வாடகை ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வருவதால் அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை எலி, பெருச்சாளி சேதப்படுத்தி வருகிறது. இதனால் உணவு பொருட்கள் வீணாகி வருகிறது. மேலும் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் கூட்டுறவு துறை வாடகை செலுத்தி வருகிறது.

 

Related Stories: