சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி பகுதியில் நேற்று (26.07.2026) காலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ராம்பிரகாஷ்(வயது 32). த/பெ. ரவீந்திரன், ராமச்சந்திரன் (வயது 40). த/பெ. ரவீந்திரன், இன்னாசிமுத்து (வயது 44). த/பெ. சிங்கராஜ் மற்றும் நாரணாபுரத்தைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 35). த/பெ. மாரியப்பன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், முறையான அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக பட்டாசு ஆலைகள் நடத்தப்படுகின்றனவா என்பதனை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: