சர்க்கரை தட்டுப்பாடா? ஆலைகளில் நேரில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: சர்க்கரை தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியான நிலையில், ஆலைகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ள ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் உரங்கள் தடைப்பட்டுள்ள நிலையில், நாட்டின் வேளாண் துறை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல் வரும் செப்டம்பர் மாதம் வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.

இதையடுத்து கரும்பு உற்பத்தியில் ஏதேனும் தடை ஏற்பட்டு, அதன் மூலம் சர்க்கரைத் தட்டுப்பாடோ அல்லது விலை உயர்வோ அதிகரித்து, நாட்டு மக்கள் மீது அந்தச் சுமை ஏறிவிடக் கூடாது என்பதற்காக ஒன்றிய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை இருப்பை ஆய்வு செய்ய ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: