திருப்பதி கோயிலில் ஏழுமலையானை 8 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 90,012 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 28,345 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் ரூ.4.99 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு 4.50 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 2.71 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏழுமலையானை 8 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Related Stories: