அடுத்த மாதம் அதிமுக செயற்குழு கூட்டம்?

 

சென்னை: அதிமுகவின் செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. அமைப்பு ரீதியான 85 மாவட்டங்களின் நிர்வாகிகள் உடன் ஆலோசனை நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இபிஎஸ் நடத்திய ஆலோசனையை எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன், சி.வி சண்முகம் உள்ளிட்டோர் புறக்கணித்தனர். சில மூத்த நிர்வாகிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை ஏற்க மறுத்துள்ளனர். அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த சூழலிலும் நடக்க உள்ள செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: