அயர்லாந்துடன் ஒருநாள் தொடர் ஆப்கான் அணிக்கு ரகமத் ஷா கேப்டன்

காபூல்: அயர்லாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு அகமத் ஷா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் அயர்லாந்து செல்லும் ஆப்கான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது.

ஹஷ்மதுல்லாக ஷாகிதி கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்த தொடருக்கான ஆப்கான் அணியின் கேப்டனாக அகமத் ஷா பொறுப்பேற்கிறார். முதல் 2 போட்டிகள் பிரெடியில் ஆகஸ்ட் 5, 7ல் நடைபெற உள்ளன. அடுத்த 3 போட்டிகள் பெல்ப்பாஸ்டில் ஆகஸ்ட் 10, 12, 15ல் நடைபெறும்.

ஆப்கானிஸ்தான்: ரகமத் ஷா (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஸத்ரன், செதிக்குல்லா அடல், ஹஷ்மதுல்லா ஷாகிதி, டார்விஷ் ரசூலி, அஸ்மதுல்லா உமர்சாய், இக்ரம் அலிகில், நங்யால் கரோடாய், ரஷித் கான், கஸன்பார், யமின் அகமத்சாய், சலீம் சபி, பஸல்லாக் பரூக்கி, ஜியா உர் ரகுமான்.

Related Stories: