உலக கோப்பை பைனலில் தோல்வி: அணியினருடன் அர்ஜென்டினா செல்லாத மெஸ்சி

நியூயார்க்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரில் இறுதி போட்டியில் ்ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஸ்பெயினிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அணியினருடன் ஒரே விமானத்தில் சொந்த நாட்டிற்கு பயணம் செய்யவில்லை. ஏனெனில், அவர் தனது கடுமையான உலகக் கோப்பை ஆட்டங்களுக்குப் பிறகு உடனடி ஓய்வு மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக அமெரிக்காவில் உள்ள மியாமிக்கு சென்றார்.

அங்கு ஒருநாள் தங்கிவிட்டு, பின்னர் தனது சொந்த விமானம் மூலம் அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகருக்குத் தனியாகச் சென்றடைந்தார். மெஸ்ஸி தற்போது அமெரிக்காவின் இண்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். உலகக் கோப்பை தொடரின் சோர்வு காரணமாக, அவர் இண்டர் மியாமி அணியின் அடுத்த சில போட்டிகள் மற்றும் வரும் 29 தேதி நடைபெறவுள்ள எம்எல்எஸ் ஆல்-ஸ்டார் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: