நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒன்டே: 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் த்ரில் வெற்றி

பிரிட்ஜ்டவுன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றிபெற்ற நிலையில் அடுத்த 3 போட்டியிலும் நியூசிலாந்து வென்று 3-1 எனதொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்செய்த நியூசிலாந்து 50ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 268 ரன் எடுத்தது.

அதிகபட்சமாக டாம் லதாம் 69, நிக் கெல்லி 64, வில்யங் 56 ரன் அடித்தனர். வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கில் அல்சரி ஜோசப் , வைட்டல் லாஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ்அணியில் தொடக்க வீரர்கள் அக்கீம் அகஸ்டே 34, ஜஸ்டின் கிரீவ்ஸ் 22, கீசி கார்ட்டி 20, கேப்டன் ஷாய் ஹோப் 39 ரன்னில் வெளியேற ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 58 பந்தில் 61 ரன் அடித்தார். ஹெட்மயர் நாட் அவுட்டாக 64 பந்தில் 68 ரன் எடுத்தார். 47.3ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இருப்பினும் 3-2 என தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.

Related Stories: