ராஜபாளையம், ஜூலை 24: ராஜபாளையத்தில் நீதிமன்றத்தில் ஆஜாராகமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.ராஜபாளையம் தெற்கு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சமயராஜ்(41). இவர் தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற விசாரணைக்காக ராஜபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஜரானார். அதன்பின்பு கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றத்தால் வாய்தா போடப்பட்டது. ஆனால் சமயராஜ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிணை நிபந்தனையை மீறியதால் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தால் கடந்த 20ம் தேதி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருந்த சமயராஜை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
