ராஜபாளையத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் கடும் அவதி

ராஜபாளையம், ஜூலை 23:ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கத்தினாலும் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலால், நகர்ப்பகுதிகளில் உள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் கட்டிட தொழிலாளர்கள் உள்ளனர். வெயிலின் காரணமாக தொடர்ந்து கட்டிட பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுள்ளது. நகர்ப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஆறாவது மைல் நீர்த்தேக்கத்திலிருந்து, நகராட்சி சார்பில் வாரத்தில் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது ஏற்படும் மின்தடையாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Related Stories: